Breaking News: பெரியாரியத்திடம் தோல்வியை ஒப்புக்கொண்ட சீமான்!: உண்மை ஆதாரம்!e!

திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எல்லாளன் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷின் பேட்டி வெளியான நிலையில் சீமானின் உண்மை முகம் மீண்டும் வெளியே வந்துள்ளது.
சீமான் பாஜகவை நோக்கி நகர்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. நடிகர் விஜயக்கு சாபம் கொடுத்து பாஜகவை நோக்கி நகர்கிறார்.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு எப்படி முக்கியமானதோ அதேபோல ஈழ அரசியலும் தமிழ்நாட்டில் 70களுக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுத போராட்டங்களை தமிழீழ இயக்கத்தினர் ஆரம்பித்தபோது எந்த அமைப்பும் அழித்து ஒழிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்தபோதிலும் அந்த மண் அழிக்கப்படவில்லை. யாராலும் காட்டிக் கொடுக்கப்படவும் இல்லை.
சீமான் இலங்கைக்குச் சென்று வந்த பிறகு தமிழீழ மண் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது. அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருந்த சீமான் பதுங்கிடங்கள், தளவாடங்கள், தளபதிகள் யார் என உளவு பார்த்து சிங்கள அரசிற்கும் பன்னாட்டு அரசிற்கும் கொடுத்ததால், 2009ம் ஆண்டு தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. தற்போது வெளியாகும் பல்வேறு செய்திகளும், ஆதாரங்களும் அச்சத்தையும் மன இறுக்கத்தையும் உண்டாக்குகிறது.

எந்தப் புகைப்படத்தை காட்டி என்னைப் போன்ற இளைஞர்களை சீமான் ஏமாற்றினாரோ அது எடிட் செய்யப்பட்டது என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சீமான் 10 நிமிடம்தான் பிரபாகரனைச் சந்தித்தார். பிரபாகரனுக்கு சீமான் யார் என்று தெரியாது. வன்னியரசும், கொளத்தூர் மணியும் அறிமுகப்படுத்திய பிறகே சீமான் குறித்து தெரியவந்ததாக எல்லாளன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் சந்தித்த உண்மையான படம் வெளிவரவில்லை என்பதையும், வீடியோவும் இருக்கிறது என்றும் அவர் சொல்லியிருப்பது அச்சத்தை மட்டும் தரவில்லை, தமிழ், தமிழீழம் என்று கூறி என்னைப் போன்ற இளைஞர்களை பொய், பித்தலாட்டம், அவதூறில் சிக்கவைத்து வாழ்க்கையையே சீமான் கெடுத்திருக்கிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது.
சீமான், தமிழீழ அரசியலை தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் மழுங்கடிக்க செய்துள்ளார். சீமானுக்கு தனி தமிழீழம் குறித்து அக்கறை இல்லை. தமிழீழம் தொடர்பாக பன்னாட்டு தளத்தில் சட்டரீதியாக இயங்கும் அமைப்புகளுடன் முரண்பாடு உள்ளவர் சீமான். தமிழீழத்தை கொச்சைப்படுத்தியவர் சீமான். சீமானின் செல்போனில் வைத்துள்ள ஸ்டேட்டஸ். சமஸ்கிருதம் திணிப்பை விட, இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு.
சீமான், பிரபாகரனை சந்தித்தாக சொல்லக்கூடிய பொய் சம்பவங்கள் குறித்த வீடியோ இன்னும் ஒரு சில நாட்களில் வெளியே வரும். சீமான் சில்லரை வேலைகளை செய்து வருகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் டெபாசிட் வாங்க முடியாது. புலிகளுக்கு ஆதரவாக சீமான் மீது ஏதும் வழக்குகள் போடப்பட்டுள்ளதா?. விடுதலை போராட்டத்தை சீமான் கொச்சைப்படுத்தியுள்ளார்.
சீமான் பெரியாரைதொடர்ந்து அம்பேத்கரை அவதூறாக பேசுவார் என்று நினைக்கின்றேன். சீமான் மனநோயில் பாதிக்கப்பட்டுள்ளார். ராஜ்குமார் மீது சீமான் வழக்கு போடவில்லை. சீமானின் இயல்பு என்பது கெட்ட வார்த்தைகளில் பேசுவது தான். பிரபாகரனின் அண்ணன் மகன் குறித்த கருத்துக்கு சீமானிடம் பதில் இல்லை” என்றார்.
மேலும், “சீமான் நேற்று இரவு தனது செல்போன் ஸ்டேட்டஸில் “சமஸ்கிருத திணிப்பைவிட இந்தித் திணிப்பைவிட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு” என்று வைத்து இருக்கிறார். இதுதான் அவரது மனநிலை. இந்தி, சமஸ்கிருதத்தை – திணிப்பை ஏற்கிறார் சீமான். ஆனால் இவற்றை எதிர்த்து தமிழர்களுக்காக போரிடாய பெரியாரை எதிர்க்கிறார்” என்று ராஜீவ் காந்தி தெரிவித்தார்.
அவரது பேட்டி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில், நாம் சீமானின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணை பார்த்தோம். அந்த வாசகங்கள் உள்ள ஸ்லைடு நீக்கப்பட்டு இருந்தது.
அதாவது, தனது பெரியார் எதிர்ப்பு தவறு என்பதை, தனது பேச்சுக்கள் தவறு என்பதை.. தனது தோல்வியை சீமான் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம்.
– டி.வி.சோமு
tamilankural.com