கனிமொழி திறந்து வைத்த சலூன் !!
சென்னை; தென்னிந்தியாவில் மிக முக்கியமான சலூனாக வளர்ந்து வரும் ஸ்டுடியோ 7 ப்ரீமியம் சலூன். இதன் புதியகிளையை தி.மு.க எம்.பி கனிமொழி அவர்கள் திறந்து வைத்துள்ளார். சென்னையில் புதிதாக தடம் பதித்துள்ள இந்தச் சலூன்கடை சேலம், மதுரை, கோவை, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் பிரபலமான சலூன் சேவையை தொடர்ந்து வருகிறது. இதன் 35-ஆவது பிராஞ்ச் தான் நேற்று சென்னையில் உதயமாகியுள்ளது. இச்சலூனில் ஹேர்கட்டிங் முதல் ஸ்கின் சர்வீஸ் வரை செய்யவிருக்கிறார்கள்.
சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி காலனி 2வது கிராஸ் தெருவில் அமைந்துள்ள இந்தச் சலூனில் உபகரணங்கள் முதல் உபசரிப்பு வரை அனைத்துமே உயரிய வகையில் இருக்கின்றன. மேலும் கஸ்டமர்களை மகிழ்விக்கும் விதமாக ப்ரீமியம் பிராண்ட்ஸ் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சலூனோடு லோரியல் பேரீஸ், போன்ற லீடிங் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்கள் அசோசியேட் ஆகியிருக்கிறார்கள். அதனால் அதிநவீன தரத்துடன் இருக்கும்.
இன்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறப்புவிழாவை சிறப்பித்தார் கனிமொழி எம்.பி. மேலும் சினிமா பிரபலங்கள் சிவகார்த்திகேயன்,பா.ரஞ்சித், காளி வெங்கட், பிக்பாஸ் தர்ஷன், பால.சரவணன் கலையரசன், மெட்ரோ ஷிரிஷ், சரண்யா ரவிச்சந்திரன்,சாக்ஷி அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சலூன்கடையின் தோற்றமே கண்ணை கவரும் விதமாக இருக்கிறது. சென்னையில் இதன் அடுத்த கிளையை வி.ஆர் மாலில் துவங்க இருக்கிறார்கள். அடுத்து அண்ணாநகரிலும் துவங்க இருக்கிறார்கள். வரும் 2021-ஆம் ஆண்டிற்குள் 100 சலூன்களை திறக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கின்றனர்.