சாவீ: திரை விமர்சனம்
சாவு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையோடு – டார்க் காமெடியாக – சொல்ல முயன்று இருக்கிறார்கள்.
மதங்களைக் கடந்து காதலித்து திருமணம் செய்துகொள்கிறது ஒரு ஜோடி. அவர்களது ஒரு மகன் பிறக்கிறான். இந்த நிலையில் ஜோடியை கொலை செய்யப்படுகிறது.
அந்த மகன் வளர்ந்து ஆளாகிறான். தனது பெற்றோரை கொன்றது தாய் மாகன்கள்தான் என தெரிந்து அவர்களை பழி வாங்க காத்திருக்கிறார். அதே நேரம் மாமன்களில் ஒருவரது மகளை காதலிக்கிறான்.
இந்த நிலையில் மாமன் இறக்க.. அன்றைய இரவில் அவரது பிணம் காணாமல் போய்விடுகிறது.
பிணத்தை யார் கடத்தினார்கள்… என்ன காரணம் என்பதே கதை.
கதையின் நாயகனாக உதயா தீப். ஜாலியான இளைஞராக வலம் வருகிறார். காதலியிடம் செல்லமாக கோபிப்பது.. சாவு வீட்டிலும் கவலை இன்றி ( பிளாக்) காமெடி செய்வது என கவர்கிறார்.
காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் ஆதீஷ்பாலா விரைப்பாக வந்து கவனம் ஈர்க்கிறார்.
ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்ரி உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் ஆகியோரின் இசை, படத்துக்கு பலம்.
பூபதி வெங்கடாசலத்தின் கேமரா, படத்துடன் ஒன்றி ரசிக்கவைக்கிறது.
சுந்தர் எஸ், ராகேஷ் லெனின் கூட்டணியின் எடிட்டிங் கச்சிதம்.
சாவு வீடு (இதன் சுருக்கம்தான் தலைப்பாக சாவீ என வைத்து இருக்கிறார்கள்).. அங்கு நடக்கும் பிளாக் காமெடி என வித்தியாசமான கதையை அளித்து இருக்கிறார் இயக்குநர் ஆண்டன் அஜித்.
பார்த்து ரசிக்கலாம்.

