அம்பேத்கரை கொன்றது ஆர்.எஸ்.எஸ்? மனைவி உடந்தை? : சர்ச்சை புத்தகம்!

அம்பேத்கரை கொன்றது ஆர்.எஸ்.எஸ்? மனைவி உடந்தை? : சர்ச்சை புத்தகம்!

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் தனது 65ம் வயதில் 6 திசம்பர் 1956 அன்று மறைந்தார்.  அப்போதில் இருந்து, “அவரை அவரதுமனைவி சவிதா உதவியுடன் ஆர்.எஸ்.எஸ்.தான் கொன்றது” என்கிற சர்ச்சையை சிலர் கிளப்பி வருகிறார்கள்.  அவர்கள், அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதால் அந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன.

அதே நேரம்,  அப்போதைய ஒன்றிய தலைமை அமைச்சர் நேரு, “அம்பேத்கர் மறைவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அது இயற்கை மரணம்” என்றார்.

தவிர, அம்பேத்கர் தனது மனைவி சவீதாவை, “தாய்” என்றே அழைத்தார். மனமுருகி காதலித்தார். “என் ஆயுளை நீடிக்க வைப்பவர்” என்றார்.

அவரது மரணத்துக்குப் பிறகும் சவீதா, தொடர்ந்து இயங்கினார், அம்பேத்கர் குறித்து “பாபா சாகேப்: மை லைப் வித் டாக்டர் அம்பேத்கர்” என்ற புத்தகம் எழுதினார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது, சவீதாதான் பெற்றுக்கொண்டார்.

ஆனாலும் அம்பேத்கர் மரணம் குறித்த சர்ச்சையும் அதில் சவீதாவுக்கு தொடர்பு என்கிற கருத்தும் அவ்வப்போது எழுகிறது.

அம்பேத்கரின் மரணத்துக்கு அவரது (இரண்டாவது) மனைவி சவீதாதான்,  (ஆர்.எஸ்.எஸ். துணையுடன்) காரணம் என, நந்தினி ஆனந்தன் ஒரு புத்தகத்தை பி.டி.எப். முறையில் வெளியிட்டு உள்ளார். அண்ணலின் மறைவுக்குப் பிறகு அவருக்கு நெருக்கமான சிலரால் பதிவு செய்யப்பட்ட விசயங்கள், காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார், நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், பத்திரிகை செய்திகள் ஆகியவற்றை சிறப்பாக தொகுத்து அளித்து இருக்கிறார்.

அந்த புத்தகம்…

Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS

Related Posts