’ரூட் நம்பர் :17’ மிரட்டும் டிரெய்லர் வெளியீடு

’ரூட் நம்பர் :17’ மிரட்டும் டிரெய்லர் வெளியீடு

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ரூட் நம்பர் 17’. அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஞ்சு, விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர். ஹரிஷ் பெராடி , அருவி மதன், அமர் ராமச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவுசேப்பசன் இசை அமைக்கும் இந்தப் படம் பற்றி அபிலாஷ் ஜி தேவன் கூறும்போது, “1990 முதல் 2020 வரை 3 கால கட்டங்களில் நடக்கும் பழிவாங்கும் கதை. ஜித்தன் ரமேஷ் 3 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

டிரெய்லர் எப்படி இருக்கு: அடர்ந்த காட்டுக்குள் பூமியில் இருந்து ஒரு கை வெளியில் வருகிறது. அந்த பகுதியில் தொடர் விபத்து நடப்பதாக ஒரு குரல் ஒலிக்கிறது. இரண்டு ஜோடி காட்டுக்குள் போகிறது காதலனை  காட்டுக்குள் இருக்கும் மர்ம நபர் தாக்குவதாக  மிரட்டலாக டிரெய்லரில் காட்டுகிறார்கள்.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts