தலைநகரம் 2

எஸ்.எம். பிரபாகரன் தயாரிக்க, வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘தலைநகரம் 2’. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
திருந்தி வாழும் ரவுடி, சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்கிறார்.
இதற்கிடையே வடசென்னை (ஜெய்ஸ் ஜோஸ்), மத்திய சென்னை (விஷால் ராஜன்), தென் சென்னை (பிரபாகர்) பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவுகிறது.
இதில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை பாலக் லால்வானி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். இதில் தேவையில்லாமல் சுந்தர் சி பெயர் அடிபட.. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
படத்தில் நடித்துள்ளவர்களில் சுந்தர்.சி தவிர்த்து அத்தனை பேரும் தங்களுடைய கேரக்டர்களை குறைவில்லாமல் செய்துள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார். ரிட்டையர்ட் ரவுடியின் கேரக்டரை அசால்டாக செய்து பாராட்டைப் பெறுகிறார்.
தொட்டி ஜெயா படம் போலவே அதிரடி ஆக்சன் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் வி.இசட்.துரை. திரை எங்கும் ரத்தம் தெரிக்கிறது. ஆனால் திரைக்கதை இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். குறிப்பாக சுந்தர்.சியை பழிவாங்க நினைக்கும் காட்சிகள் பெரும்பாலும் வசனங்களோடு கடந்து போகிறது.
பழிவாங்கும் காட்சிகளை அப்படியே கொடூரமாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு ப்ளஸ்.