விமர்சனம்: இறுகப்பற்று
பொடன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பாபு தயாரிக்க, யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மித்ரா மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ளது இறுகப்பற்று.
விவாகரத்து செய்ய முன் வரும் தம்பதிகளுக்கு தனது அலுவலகத்திலும், நீதிமன்றத்திலும் ஆலோசனைகள் வழங்கி சேர்த்து வைக்கும் பணியை செய்து வருகிறார் மித்ரா மனோகர்.
மித்ராவிடம், தனது மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து கேட்க வருகிறார் ஒருவர். இன்னொருவர், தனது மனைவி தன்னை ஏன் வெறுக்கிறார் என்றே தெரியவில்லை என்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் மித்ராவே தனது கணவர் மனோகருடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருக்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனை தீர்ந்ததா என்பதை கதையாக இல்லாமல் வாழ்வியலாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
கணவன் மனைவிக்கு மன நல ஆலோசனை என்ற விஷயம் படம் முழுக்க இருந்தாலும் பரப்புரையாக இல்லாமல் சுவாரஸ்யமான கதையாக கொண்டு போயிருக்கிறார்கள்.
ஆலோசகராக, மனைவியாக சிறப்பான நடிப்பை அளித்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத். அட.. விக்ரம் பிரபுவா இது… அற்புதமான நடிப்பு!
மனைவி எதை செய்தாலும் ஏற்று கொள்ளும் கணவனாக வருகிறார். அதே நேரம், வாழ்க்கையையும், தொழிலையும் பிரித்து பார்க்காத மனைவியால் தவிக்கும் சரா சரி கணவனை கண்முன் நிறுத்துகிறார்.
விதார்த் வழக்கம்போலவே சிறப்பான நடிப்பு. குறிப்பாக, தனது ஈகோ உடைந்து அழும் போது கலங்கவைக்கிறார்.
போது ஒரு சராசரி குடும்பத்தலைவியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்நதி. ஸ்ரீ, சானியாவும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் நமக்குள் ஊடுருவுகிறது.
”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்க்கு காரணம் தேவையில்லை; கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம்தான் “என்ற வசனத்துடன் துவங்குகிறது படம்.
இறுதியில், “உங்கள் வாழ்க்கை துணையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் பிடிக்க ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும்! இதை மனதில் வைத்து துணையின் கரங்களை இறுக பற்றிக்கொள்ளுங்கள்” என்று மனதில் பதியவைக்கிறது இறுகப்பற்று.