ரூ. 1000000000-யை நெருங்கும் ராயன்! அதிரடி வசூல் நிலவரம்!

ரூ. 1000000000-யை நெருங்கும் ராயன்! அதிரடி வசூல் நிலவரம்!

தனுஷின் ராயன் திரைப்படம் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியானது. பட அறிவிப்பு வந்தவுடனே எதிர்பார்ப்பு எகிறியது.

காரணம் இது சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கும் திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை,  எஸ்.ஜே.சூர்யா, துசாரா, காளிதாஸ் சந்தீப், அபர்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்… இது போன்ற காரணங்களோடு…  தனுசின் ஐம்பதாவது திரைப்படம், அவரே இயக்கப்போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

 

அதே போல், உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ 82 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த படம் ரூ 100 கோடி வசூலை பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து,  தனுஷ் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.