திரையரங்குகளில் கால்பதிக்கும் Amazon MGM Studios

திரையரங்குகளில் கால்பதிக்கும் Amazon MGM Studios

இந்த அறிவிப்பின் மிக முக்கியமான சிறப்பம்சமே, அமேசான் நிறுவனம் இனி நேரடி ஓடிடி வெளியீடு மட்டுமின்றி, திரையரங்கு படத் தயாரிப்பிலும் (Theatrical Originals) தீவிரமாக இறங்குகிறது என்பதுதான். இதற்காக ‘Amazon MGM Studios India’ மூலம் ஐந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • ராஜ்குமார் ராவ் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரஃப்தார்’ (Raftaar).

  • குணால் கெமு இயக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா நடிக்கும் ‘வைபை’ (VIBE).

  • லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் ‘தில்காஷி’ (Dilkashi).

  • யாமி கௌதம் நடிக்கும் ‘நயி நவேலி’.

  • புவன் பாம் – வாமிகா கபி இணையும் ‘குகு கி குண்ட்லி’.

பாலிவுட் உச்ச நட்சத்திரங்களுடன் மெகா கூட்டணி

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ள பிரைம் வீடியோ, இந்த முறை இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களை உள்ளே இழுத்துள்ளது:

  1. ஹிருத்திக் ரோஷனின் HRX Films: ‘ஸ்டார்ம்’ (Storm) என்ற ஒரிஜினல் தொடர் மற்றும் ‘மெஸ்’ (Mess) என்ற திரைப்படம் மூலம் ஸ்ட்ரீமிங் உலகில் தடம் பதிக்கிறார் ஹிருத்திக்.

  2. ஆலியா பாட்டின் Eternal Sunshine Productions: ‘டோண்ட் பி ஷை’ (Don’t Be Shy) என்ற ஒரிஜினல் திரைப்படத்தை பிரைம் வீடியோவிற்காக ஆலியா தயாரிக்கிறார்.

இவை தவிர தர்மடிக் என்டர்டெயின்மென்ட், எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபி ஃபிலிம்ஸ் போன்ற ஜாம்பவான்களுடனும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தென்னிந்திய மொழிகளில் அதிரடி – ‘இன்ஸ்பெக்டர் ரிஷி 2’ தயார்!

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களைக் கவரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன:

  • தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ (Inspector Rishi) மற்றும் ‘வதந்தி’ (Vadhandhi) தொடர்களின் 2-ம் பாகங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

  • ‘எக்ஸாம்’ (Exam) என்ற புதிய தமிழ் நாடகத் தொடரும் பட்டியலில் உள்ளது.

  • தெலுங்கில் தேஜா சஜ்ஜா தொகுத்து வழங்கும் ‘தி ட்ரைட்டர்ஸ்’ (The Traitors) மற்றும் கிரண் அபாவரம் நடிக்கும் ‘குவ்வாலா செருவு காட்’ போன்ற படைப்புகள் வெளியாகவுள்ளன.

பிளாக்பஸ்டர் தொடர்களின் அடுத்த சீசன்கள்

ஏற்கனவே ஹிட் அடித்த Farzi (சீசன் 2), Panchayat (சீசன் 5), Dahaad (சீசன் 2) மற்றும் Call Me Bae (சீசன் 2) ஆகிய தொடர்களின் புதிய சீசன்கள் மூலம் ரசிகர்களைத் தக்கவைக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் முதல் ‘ஹோம்-க்ரோன்’ சூப்பர் ஹீரோ தொடரான ‘வம்ஷ்’ (Vansh – The Kalyug Warriors) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அசுர வளர்ச்சி

இது குறித்து பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குனர் ஷிலங்கி முகர்ஜி பேசுகையில், “2025-ல் உலகளவில் புதிய பிரைம் உறுப்பினர்களை ஈர்ப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் சராசரியாக 4-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தைப் பார்க்கின்றனர். உலகளவில் அதிகம் பார்க்கப்படும் முதல் 50 ஆங்கிலம் அல்லாத படைப்புகளில் பாதிக்கும் மேல் இந்தியாவிலிருந்து வந்தவை என்பது பெருமைக்குரியது” எனத் தெரிவித்தார்.

ஸ்ட்ரீமிங் தளங்களுக்கிடையேயான போட்டியில், தியேட்டர் ரிலீஸ் மற்றும் மெகா பட்ஜெட் ஒரிஜினல்ஸ் என ‘இரட்டை குழல் துப்பாக்கி’யுடன் அமேசான் களம் இறங்கியிருப்பது, மற்ற ஓடிடி தளங்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts