பிரபுதேவா நடிக்கும் பஹிரா’’ பெயர் ரகசியம்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவா நாயகனாக கொண்டு இயக்கியுள்ள படத்திற்கு “பஹிரா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெயரானது நம்மனதில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப்பற்றியது என ஆவலைத் தூண்டும்படி இந்தப் படத்தின் தலைப்பு அமைந்திருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பெயரைப் பற்றி கூறும்போது…
இந்தப் பெயர் பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது.
அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம். இத்தருணத்தில் நடிகர் தனுஷுற்கு எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்மம் நிரைந்த படமாகும். அதனுள் பல ஆச்சர்யங்களும் பல திருப்பங்களும் கொண்டிருக்கும்.
இப்படம் சைக்கோ திரில்லர் வகை என்றால் தொடர் கொலைகள் படத்தின் கதையில் இடம்பெறுமா என கேள்வி வரலாம்.
இப்போதைக்கு இந்த கதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த வகையான படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை இந்தப்படம் உங்களுக்கு தரும். இதுவரையில் இல்லாத பல புதுமைகளை இப்படத்தில் கையாள உள்ளோம். படத்தை பற்றி சொல்லி அதன் சுவராஸ்யங்களை குறைக்க விரும்பவில்லை.
அதனால் அதை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உறுதி இப்படத்தில் பிரபுதேவாவை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் பார்க்கலாம் என்றார்.