திரைக்களம் அதிரப்போகுது! ‘பி.கே. ரோசி திரைப்படத் திருவிழா 2026’!
சினிமான்னா வெறும் கலர்ஃபுல் கனவு மட்டுமில்ல, அது அதிகாரத்தோட அஸ்திவாரத்தை அசைச்சுப் பார்க்குற ஆயுதம்னு ஓங்கிச் சொல்லுது ‘வானம் கலைத் திருவிழா’. அந்த வரிசையில, இந்த வருஷம் 5-வது ஆண்டா பட்டையக் கிளப்ப வருது ‘பி.கே. ரோசி திரைப்படத் திருவிழா 2026’.
யார் இந்த பி.கே. ரோசி? – ஒரு பிளாஷ்பேக்!
1928-ல மலையாளத் திரையுலகோட முதல் ஹீரோயினா அறிமுகமானவங்க பி.கே. ரோசி. ஒரு தலித் பெண், படத்துல உயர்சாதிப் பெண்ணா நடிச்சார்ங்கிற ஒரே காரணத்துக்காக, அன்னைக்கு இருந்த சாதியச் சமூகம் அவங்க வீட்டை எரிச்சு, ஊரை விட்டே துரத்துச்சு. வரலாற்றுப் பக்கங்கள்ல மறைக்கப்பட்ட அந்த வீரத்தமிழச்சியோட பேரை, இன்னைக்கு உலகமே அண்ணாந்து பார்க்குற மாதிரி ‘நீலம் பண்பாட்டு மையம்’ கொண்டாடிட்டு வருது!
கடந்த நாலு வருஷமா என்னாச்சு? – ஒரு குயிக் லுக்!
ஏற்கெனவே நடந்த நாலு விழாக்கள்லயும், ஒடுக்கப்பட்ட மக்களோட வாழ்வியலைப் பேசுற உலகத் தரம் வாய்ந்த படங்கள் திரையிடப்பட்டு, பெரிய அதிர்வலைகளை உருவாக்குச்சு. ‘சினிமான்னா வெறும் ஹீரோ-ஹீரோயின் டான்ஸ் மட்டுமில்ல, அது ஒரு அரசியல் தளம்’னு விவாதங்கள் மூலமா நிரூபிச்சதுதான் இந்த விழாவோட பெரிய சக்சஸ்!
இந்த 5-வது ஆண்டு விழா, ரொம்பவே ஸ்பெஷல்! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மாஸான ஓப்பனிங் காத்திருக்கு.
நடிப்பு அரக்கன் பசுபதி: எப்போவுமே ‘வெர்சடைல்’ பெர்ஃபார்மன்ஸால மிரட்டுற பசுபதி சார் இந்த விழாவைத் தொடங்கி வைக்கப்போறாரு!
புரட்சிக் கலைஞர் பா. இரஞ்சித்: தமிழ் சினிமாவோட அழகியலை மாத்தி அமைச்ச நம்ம இரஞ்சித் சாரும் சேர்ந்து வர்றதுனால, கொண்டாட்டம் வேற லெவல்ல இருக்கப்போகுது!
எப்ப? எங்க?:
ஏப்ரல் 8 | இரவு 7 மணி – பிரசாத் பிரிவியூ தியேட்டர், சாலிகிராமம், சென்னை.
குறும்படம், ஆவணப்படம், முழுநீளப் படம்னு உலக நாடுகளோட பல படைப்புகள் வரிசை கட்டி நிக்குது. நீலத் திரையில நீதிக்கான குரல் ஒலிக்கப்போகுது… நீங்களும் அந்தப் புரட்சியில கலந்துக்கத் தயாரா?

