பகலறியான் விமர்சனம் 

பகலறியான் விமர்சனம் 

அடிதடியையே  தொழிலாக வைத்திருக்கும் நாயகன் வெற்றி, சிறு வயதில் தனது அப்பாவை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர்.   இந்நிலையில் அவரும்
நாயகி அக்ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள்.

ஆனால், “ரவுடிக்கு என் மகளை திருமணம் செய்துவைக்க மாட்டேன்” என்கிறார் அக்‌ஷயாவின் தந்தை.

இதையடுத்து  வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் செல்கிறார்  அக்க்ஷயா.

இன்னொரு பக்கம், தனது தங்கையை காணாமல் தேடி வருகிறார்  கேங்க்ஸ்டர்  முருகன்.

இதற்கிடையே  வெற்றியை கொலை செய்ய ஒரு கும்பலும், முருகனை கொலை செய்ய கும்பலும் துரத்துகிறது.
இறுதியில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

நாயகன் வெற்றி,  வழக்கம் போலவே வெற்றுப் பார்வையுடன் வந்து போகிறார். வில்லனாக வரும்  இயக்குனர் முருகன், மிரட்டி இருக்கிறார்.  ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவது, அதிரடி சண்டை என அசத்துகிறார். இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது அவரது கதாபாத்திரம். அதற்கேற்ற நடிப்பை வழங்கி இருக்கிறார்.

குறப்பாக,  க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தங்கை மீதான பாசத்தை வெளிக்காட்டும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

சாப்ளின் பாலு. அக்ஷயா கந்தமுதன், வினு பிரியா உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஒரே இரவில் நடக்கும் கதை. அதற்கேற்ற அதிரடியான இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பு.

கேங்க்ஸ்டர் மனிதர்களின் ஆக்ரோசத்துடன் அவர்கள் மனதில் இருக்கும் பாசத்தையும் சொல்லி கவனம் ஈர்க்கிறார்  இயக்குர் முருகன்.

மொத்தத்தில், அதிரடி படங்களை ரசிப்பவர்களுக்கு ஏற்ற படம்.