நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ மே 3 முதல் திரையரங்குகளில்…

நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ மே 3 முதல் திரையரங்குகளில்…

அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்?
மே 3, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில், சில்லிட வைக்கும் திகிலைக் காணத் தயாராகுங்கள். இப்படம், 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் டேரோட் கார்டுகளைப் படிக்கத் தொடங்குகிறது. விளையாட்டு விபரீதமாகி, அவர்களுக்குக் கிடைக்கும் கார்டின் அதிர்ஷ்டம் பொறுத்து, அவர்களில் சிலர் இறக்க நேரிடுகிறது. அச்சத்தில் உழலும் உயிர் தப்பியவர்கள், தாங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் குழுவாக இணைந்து ஒரு தப்பிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உணருகின்றனர்.

Larsen Thompson “Elise” in Screen Gems TAROT

நண்பர்கள் குழு, டேரோட் வாசிப்புகளின் புனித விதியைப் பொறுப்பற்ற முறையில் மீறும் போது, டேரோட் அவர்களை ஒரு திகில் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. வேறொருவரின் டேரோட் கார்டை, ஒருபோதும் அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பது ஆட்ட விதி. அப்படிச் செய்தால், அவர்கள் அறியாமலே சபிக்கப்பட்ட அட்டைகளுக்குள் சிக்கியிருக்கும் பயங்கரமான தீமையைக் கட்டவிழ்த்து விடுவார்கள். ஒவ்வொருவராகத் தங்கள் விதியினை எதிர்கொண்டு, முன்னறிவிக்கப்பட்ட ஆருடத்தில் இருந்து தப்பிக்க மரணத்திற்கு எதிரான ஓட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

Related Posts