தேசிய விருது படத்தில் தேசிய விருது படத்தில் ஆறாம் வகுப்பு இயக்குநர்!

தேசிய விருது படத்தில் தேசிய விருது படத்தில் ஆறாம் வகுப்பு இயக்குநர்!

சமீபத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஸ்ரீகாந்த் தேவாவுக்கு அறிவிக்கப்பட்ட குறும்படம் கருவறை.இவி கணேஷ்பாபு இயக்கிய இந்த குறும்படத்தில் அவரது மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை அனைவரும் அறிவோம். இன்னொரு விசயம், இப்படத்தில் அவரது மகன் தமிழேந்தி உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது!தற்போத பத்தாம் வகுப்பு படித்துவரும் தமிழேந்தி, படம் உருவானபோது – 2021 ல்- எட்டாம் வகுப்பு மாணவர்.

இதுகுறித்து இவி கணேேஷ்பாபு கூறும்போது, “கடந்த சில வருடங்களாகவே, தனக்குத் தோன்றிய எண்ணங்களை செல்போன் மூலம் குறும்படங்களாக எடுத்துவந்தார் தமிழேந்தி.

இதை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டி னர். இந்த நிலையில்தான் கொரோனா இரண்டாவது அலை பொது முடக்கத்தின்போது, கருவறை படப்பிடிப்பை துவங்கினேன். அப்போது, தானும் உதவிக்க வருவதாக தமிழேந்தி கூறினார். இதையடுத்து, படத்தின் இணை இயக்குநர் அய்யானார் அவர்களுக்கு கீழே பணி புரிய வைத்தேன்” என்றார்.

இது குறித்து தமிழேந்தி, “படிப்பில் கவனம் குறையக்கூடாது என்று அப்பா, அம்மா கூறுவார்கள். ஆகவே படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் குறும்படங்கள் எடுப்பேன். கருவறை படப்பிடிப்பு நடந்த போது பள்ளி விடுமுறை. ஆகவே முழுமையாக அதில் உதவியாளராக இருந்தேன்” என்றார்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே – 13 வயதிலேயே – உதவி இயக்குநராக ஆகிவிட்டார் தமிழேந்தி. அதே போல மிக இளம் வயது இயக்குநர் என்கிற அந்தஸ்தையும் பெறுவார். வாழ்த்துகள்!

Related Posts