‘மியூசிக் ஸ்கூல்’: முக்கிய பிரச்சினையை பேசும் திரைப்படம்!

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
இயக்குநர் பாப்பாராவ், “இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன். குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது. ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர், ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக நடிக்கிறார்கள்” என்றார்.

