“மோடி ஆட்சி கவிழும்!”: கவிஞர் வைரமுத்து ஆரூடம்!

“மோடி ஆட்சி கவிழும்!”: கவிஞர் வைரமுத்து ஆரூடம்!

“மோடி ஆட்சி கவிழும்” என திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து சூசகமாக தெரிவித்து உள்ளார்.

நடந்து முடி்ந்த நாடாளுமன்ற தேர்தலில்,  பா.ஜ.க. பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் ஆட்சி அமைத்து உள்ளது.  “கூட்டணி கட்சிகளுடன் முரண் ஏற்பட்டு ஆட்சி கவிழ வாய்ப்பு உண்டு”என அரசியல் கணிப்பாளர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும், “ஆட்சி கவிழும்” என சூசகமாக தெரிவித்து உள்ளார்.  நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கவிதையில், “கனிமொழியை அமைச்சராக்கவில்லையா என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன் ‘காலம் வரட்டும்’ என்றார்.  இப்போது ஒருகாலம்  அருகில் வந்து
நழுவியிருக்கிறது.  ஐந்தாண்டுகளில் ஆகலாம் அல்லது  அதற்கு முன்பேகூடக் காலம் ‘கை’சேரலாம். கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்” என்று வைரமுத்து குறிப்பிட்டு உள்ளார்.

அதைவது, “ஆட்சி காலம் முடியும் முன்பே, பாஜக தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையலாம். அப்போது கனிமொழி அமைச்சராகக்கூடும்” என்கிற கணிப்பை பதிவு செய்துள்ளார் வைரமுத்து.

அவர் எழுதிய கவிதை முழுமையாக..

“ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் ‘கை’சேரலாம்
கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன் ஒரு பெரும் பெருமை
வாய்த்திருக்கிறது
கனிமொழி கருணாநிதிக்கு
நாடாளுமன்றங்களின்
குழுத் தலைவராய்
தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது
கலைஞர் திருமகள்
கவிஞர்
முதலமைச்சரின் தங்கை
பகுத்தறிவாளர் என்ற
பிறவிப் பெருமைகளைத் தாண்டி
மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான்
இந்திய அரசியல் இதைக்
கணக்கிட்டுக் களிக்கும்
கனிமொழியின்
பதின் பருவத்தில்
கலைஞர்தான் எனக்கு
அறிமுகம் செய்தார்
காற்றோடு உரையாடும்
பூவைப்போன்ற மென்மையும்
கல்லுறுதி போன்ற
சொல்லுறுதியும்
சிங்கத்தின் இருதயமும்
கனிமொழியின் தீராத குணங்கள்
கனிமொழியை
அமைச்சராக்கவில்லையா
என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன்
‘காலம் வரட்டும்’ என்றார்
இப்போது ஒருகாலம்
அருகில் வந்து
நழுவியிருக்கிறதுஒரு பெரும் பெருமை
வாய்த்திருக்கிறது
கனிமொழி கருணாநிதிக்கு
நாடாளுமன்றங்களின்
குழுத் தலைவராய்
தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது
கலைஞர் திருமகள்
கவிஞர்
முதலமைச்சரின் தங்கை
பகுத்தறிவாளர் என்ற
பிறவிப் பெருமைகளைத் தாண்டி
மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான்
இந்திய அரசியல் இதைக்
கணக்கிட்டுக் களிக்கும்
கனிமொழியின்
பதின் பருவத்தில்
கலைஞர்தான் எனக்கு
அறிமுகம் செய்தார்
காற்றோடு உரையாடும்
பூவைப்போன்ற மென்மையும்
கல்லுறுதி போன்ற
சொல்லுறுதியும்
சிங்கத்தின் இருதயமும்
கனிமொழியின் தீராத குணங்கள்
கனிமொழியை
அமைச்சராக்கவில்லையா
என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன்
‘காலம் வரட்டும்’ என்றார்
இப்போது ஒருகாலம்
அருகில் வந்து
நழுவியிருக்கிறது
ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் ‘கை’சேரலாம்
கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன்
Kanimozhi Karunanidhi
ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் ‘கை’சேரலாம்
கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன்”

– இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்து உள்ளார்.

Related Posts