“21 நாட்கள் நாடு முழுதும் ஊரடங்கு!” பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, குரோனோ வைரஸ் தடுப்பு குறித்து இரண்டாம் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், “கொரோனா பாதிப்பில் இருந்து மீள, தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 15ம் தேதி வரை நாடு முழுதும் தெரிவித்ததாவது:
“15000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இது மருத்துவம் மற்றும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இருக்கும். ஆனால் கும்பலாக வெளியில் செல்லக்கூடாது.
உறவினர்களாக இருந்தாலும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.
மற்றபடி மருத்துவர்கள் மட்டுமே வெளியில் சென்று வர அனுமதி அளிக்கப்படும்.
கொரோனாவை எளிதானதாக நினைக்காதீர்கள். மிகக் கொடிய வைரஸ் அது. மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லை எனில், பெரும் அழிவை அது ஏற்படுத்தும். இது படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் ஒத்துழைத்தால்தான் அந்த வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
இந்த கடுமையான கட்டுப்பாடு நமது நாட்டு மக்களின் நலனுக்காகத்தான். ஒவ்வொரு இந்தியனும் எனக்கு முக்கியம்.
இந்த காலகட்டத்தில் வெளியில் சென்று பணியாற்றும் காவல்துறையினர், சுகாதாரத்துறை பணியாளர்கள், செய்தியாளர்களை வாழ்த்துவோம்!” – இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதன் மூலம், கொரோனா வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடியும்.
ஆகவே பிரதமர் கேட்டுக்கொண்டபடி, ஒவ்வொருவரும் ஊடரங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனாவை விரட்ட ஒன்று கூடுவோம்