” ‘அந்த’ வயசில்தான் ரொமான்ஸ் செம க்யூட்!”: தேவதர்ஷினி ஃபீலிங்!

” ‘அந்த’ வயசில்தான் ரொமான்ஸ் செம க்யூட்!”: தேவதர்ஷினி ஃபீலிங்!

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’  லக்ஷ்மன் குமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உருவாக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள  ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிச் சந்திப்பு கோலாகலமாக நடந்தது.

நிகழ்வில்  ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகை தேவதர்ஷினி பேசும்போது, “ஒரு அழகான படம் எப்படி சென்றடைய வேண்டுமோ அதே போல சென்றடைந்து இருக்கிறது. இந்த படத்தில் குடும்பம், காதல், விளையாட்டு என எல்லாமே இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்த படத்தின் அடிநாதம் என்பது காதல், ரொமான்ஸ் தான். அதை ரொம்பவே அழகாக வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

ஹீரோயினைத் தாண்டி அவரது அம்மாவிற்கும் இந்த படத்தில் ரொமான்ஸ் வைத்து இருந்தது தான் செம க்யூட். நடுத்தர வயது ரொமான்ஸ் பெரும்பாலான படங்களில் பார்க்க முடியாது. இதில் அழகாக காட்டியதற்காக நன்றி.

படப்பிடிப்பின்போது இயக்குநரிடம் சில வசனங்களை சேர்த்துக் கொள்ளலாமா என கேட்பேன். முதலில் ஸ்கிரிப்ட்டில் இருப்பதை பேசி விடுங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்பார்.ஆனால் கடைசியாக அவர் என்ன எழுதியிருந்தாரோ அதைத்தான் படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அதை பார்க்கும்போது அவர் செய்தது தான் சரி என்று தோன்றியது. அந்த வகையில் எங்களை அடக்கி வைத்ததற்கு நன்றி அம்மா கேரக்டர் தானே என்று முழு கதையும் எனக்கு சொல்லவில்லை. படத்தில் கிளைமாக்ஸ் பார்க்கும்போது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

Related Posts