ரசிகருக்கு வீட்டுக்குச் சென்று வாழ்த்து சொன்ன ‘ஹரா’ மோகன்!

ரசிகருக்கு வீட்டுக்குச் சென்று வாழ்த்து சொன்ன ‘ஹரா’ மோகன்!
வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் என்றும் ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர். மைக் மோகன் என்பதோடு, தற்போது ஹரா ( பட நாயகன்) மோகன் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹரா, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ‘வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் ரசிகர் மன்ற’ தலைவர்  அம்மாபேட்டை ஜி கருணாகரன்  தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இதை அறிந்த மோகன்,  எதிர்பாராத விதமாக கருணாகரன், வீட்டிற்கே சென்று மலர் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதை எதிர்பார்க்காத கருணாகரன் நெகிழ்ந்துபோய், “உங்கள் வருகையை எதிர்பார்க்கவே இல்லை.  மைக் மோகன் என்று பெயர் பெற்ற நீங்கள், இப்போது ஹரா மோகனாவும் மனதிற்குள் புகுந்துவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்றார்.
பல கோடி ரசிகர்களை பெற்று இருந்தாலும்,  ஒரு ரசிகரின் பிறந்தாளை நேரில் சென்று வாழ்த்திய மோகன் பெருமைக்குரியவர்தான்.

Related Posts