மகா அவதார் நரசிம்மா: திரை விமர்சனம்: அசத்தும் அனிமேசன்!

மகா அவதார் நரசிம்மா: திரை விமர்சனம்: அசத்தும் அனிமேசன்!

விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து இரன்யகசிபுவை வதம் செய்யும், அதே பக்தபிரகலாதா கதைதான். ஆனால் அனிமேசனில் மிரட்டி இருக்கிறார்கள்.

அரக்க அண்ணன் தம்பிகள், இரண்யாசனும் இரண்யகசிபுவும். இவர்கள், விஷ்ணுவை அழிக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே, வராக அவதாரம் எடுத்து இரண்யாசனை வதம் செய்து விடுகிறார் விஷ்ணு.தனது தம்பியைக் கொன்ற விஷ்ணுவை அழிக்க – மாந்தரீக சக்தி வேண்டி – பிரம்மனை நோக்கி டம் கடும்தவம் புரிகிறான் இரண்யகசிபு. தன் முன் தோன்றஉம் பிரம்மனிடம், அழியா வரம் கேட்கிறான். வரம் கிடைக்கிறது.

அதன் பிறகு பூலோகத்திலும், தேவர்கள் லோகத்திலும் பெரும் அட்டூழியங்கள் புரிகிறான். தேவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

ஆனால், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் மட்டும் அதி தீவி விஷ்ணு பக்தனாக இருக்கிறான். அதனால் மகனென்றும் பாராமல் அவனை கொல்ல திட்டமிடுகிறான் இரண்யகசிபு. அவனது முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிகின்றன.இறுதியில் அவனை,விஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்து வதம் செய்வதே இந்த அனிமேஷன் படத்தின் கதை.

முதலில் பாராட்ட வேண்டியது அனிமேஷனுக்காக படக்குழுவின் மெனக்கடலைத்தான்.

பொதுவாக புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை நமது மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருப்போம்.

அதற்கு அற்புதமாக உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.கடவுளர்கள், விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், அரக்கர்கள் இரண்யாசஷன், இரண்யகசிபு உள்ளிட்டோர் இப்படித்தான் இருப்பார்களோ என்கிற ஆச்சரிய எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அதே போல தேவலோகம், இரண்யகசிபுவின் நாடு, போர் என அனைத்தையும் கண்முன் நிறுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக இந்திய திரைப்படங்களில் அனிமேசன் அவ்வளவு திருப்தியாக இல்லை என்கிற கருத்து உண்டு. அதை அவதூரை இந்த அவதார் மாற்றி இருக்கிறது.

அந்தந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கும், காட்சி அமைப்புக்கும் ஏற்றபடி பின்னணி இசை அளித்து அசத்தி இருக்கிறார் சாம் சி.எஸ்.அதே போல பாராட்ட வேண்டியது… அற்புதமான திரைக்கதை. மிகப்பெரிய புராணக்கதையை இடைவேளை வரைவராக அவதாரம், அதன் பிறகு நரசிம்ம அவதாரம் என பிரித்து அளித்து இருக்கிறார்கள். திரைக்கதையாசிரியர்கள் ஜெயபூர்ணா தாஸ், அஷ்வின் குமார், ருத்ர பிரதாப் கோஷ் ஆகியோருக்கு பாராட்டுகள்.

இந்த புராணத்தை அறிந்தவர்கள், அறியாதவர்கள் அனைவருமே விரும்பிப் பார்க்கும்படி உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அஷ்வின் குமார்.

அதே போல எளிய தமிழில் அமைந்த வசனங்களும் படத்துக்கு அசுர பலம் கொடுத்து உள்ளது.

குழந்தைகளோடு சென்று ரசித்துப் பார்க்கலாம்.