Lubber Panthu success-meet: “கனவு நிறைவேறியது!”: கண்கலங்கிய ஸ்வாசிகா!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது லப்பர் பந்து திரைப்படம்.
கிரிக்கெட்டில் இரு ஆண்களின் ஈகோ பிரச்னை, அதோடு சாதிய பிரச்னையையும் தொட்டுச் சென்ற இப்படம், காதல், சென்ட்டிமெண்ட், காமெடி என அசத்தலான திரைக்கதையால் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் படக்குழுவினர், சக்ஸஸ் மீட் நடத்தினர்.
நிகழ்வில்இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான ஸ்வாசிகா, “நடிப்புல சாதிக்கணும்னு பெரிய கனவோட சென்னைக்கு வந்தேன். என் 16 வயசில முதல் படம் நடிச்சேன். ஆனா அந்த முயற்சி எதுக்கும் பயன்படல. நானும், அம்மாவும் சோகத்தோட ரயிலேறி கேரளா போய்ட்டோம்.
இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் தமிழ்ல இப்படி ஒரு காம்பேக் கிடைச்சிருக்கு. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ் மாதிரி!
இந்தப் படத்துல என்னோட சக நடிகர்கள் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.
யசோதா கேரக்டரை நான் நல்ல பண்ணிருக்கேன்னு தமிழ் சார் ஒருநாள் கூட சொன்னதில்ல. இப்போவாவது சொல்லுவார்னு இவ்ளோ நாளா காத்துட்டு இருக்கேன். இன்னைக்காவது சொல்லுவாருனு நெனைக்கிறேன்.
என்னோட கெத்து தினேஷ் சார் கூட `குக்கூ’ படத்துல நான் நடிக்குறதா இருந்தது. என்னமோ அது நடக்கல. இப்போ இத்தனை வருஷம் கழிச்சு அவருக்கு ஜோடியா நடிச்சதுல ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னொரு வாழ்க்கை கொடுத்ததுக்கு மொத்த படக்குழுவுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
