‘லவ் ஹார்ட் 1997’: காதல், த்ரில், ஆக்ஷன் அதிரடி! கிறிஸ்துமஸ் ரிலீஸ்!

‘லவ் ஹார்ட் 1997’: காதல், த்ரில், ஆக்ஷன் அதிரடி! கிறிஸ்துமஸ் ரிலீஸ்!

திரை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது HM CREATIONS நிறுவனத்தின் முதல் படைப்பான ‘லவ் ஹார்ட் 1997’. 1997-ல் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தின் பரபரக்கும் பின்னணியில், ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ள வரும் கதைக் களத்தோடு இந்தப் படம் செதுக்கப்பட்டிருக்கிறது.

SRM கல்லூரியில் விஷ்காம் முடித்து, சிறு வயது முதலே நடிப்பு, நடனம் என தன்னை செதுக்கிக் கொண்ட அமித், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தான் சேகரித்து வைத்த ஒட்டுமொத்த திறமையையும், நடிப்பு ஆளுமையையும் இப்படத்தில் அள்ளித் தெளித்து, திரையில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக, பார்வையாளர்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகு தேவதையாக ஹர்ஷாஹரிஷ் களம் இறங்கி அசத்தியிருக்கிறார்.

இப்படத்தின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் SA.பாகு! கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்திலும் தன் எழுத்துப் பேனாவால் மாஜிக் செய்துள்ள இவர், இப்படத்தை மிக நேர்த்தியாக தயாரித்தும் இருக்கிறார். திரைத்துறையில் நீண்ட நெடிய அனுபவமும், ஒரே ஆண்டில் 60 குறும்படங்களை இயக்கி சாதனை படைத்த பெருமையும் கொண்ட, திரையுலகினரால் அன்போடு ‘ஜின்னாஜி’ என அழைக்கப்படும் மம்மதலி இப்படத்தை மிக விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியிலும் படம் வேற லெவலில் உருவாகியுள்ளது. தினேஷ்குமாரின் கண்கள் கவரும் ஒளிப்பதிவு, C.K.முஜிபூர் ரஹ்மானின் கலை இயக்கம், சுஜய் ஆல்பியின் எனர்ஜிடிக் நடன அசைவுகள், ‘டைகர்’ பழனியின் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், V.ஜூட்டின் ஸ்டில்ஸ், வெங்கட் RK-வின் டிசைன்கள், லட்சுமி நாராயணனின் காஸ்டியூம்ஸ் மற்றும் சதீஷ் முத்துகுமாரின் தயாரிப்பு நிர்வாகம் என ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்கள் இணைந்து இப்படத்தை செதுக்கியிருக்கிறார்கள். P.மணிகண்டன் மக்கள் தொடர்பை கவனித்து வருகிறார்.

இலக்கியன் இசையில் உருவாகியுள்ள 5 பாடல்களும் செவிகளுக்குத் தித்திக்கும் விருந்தாக அமைந்திருக்கின்றன. இந்த ஆண்டின் சிறந்த ஆல்பம் என்ற பெருமையை ‘லவ் ஹார்ட் 1997’ நிச்சயம் தட்டித்தூக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! குறிப்பாக, “ஹேப்பி நியூ இயர் வந்தது, வந்தது… ஹேப்பி அள்ளி தந்தது, தந்தது” என்ற பாடல் வரவிருக்கும் ஆண்டுகள் முழுமைக்கும் டிசம்பர் 31 நள்ளிரவு கொண்டாட்டங்களின் அதிகாரப்பூர்வ கீதமாக ஒலிக்கும் அளவுக்கு இளசுகளைத் துள்ள வைக்கும் ட்யூனில் அமைந்திருக்கிறது.

சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு. ஆர்.கே.அன்புசெல்வன் அவர்களின் பொற்கரங்களால் இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு (டிசம்பர் 2026) திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் SA.பாகு உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்!

Related Posts