“டைட்டில பாத்துட்டு ‘அரசியலா’னு கேட்டாங்க… ஆனா…”: லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ அதிரடி!

“டைட்டில பாத்துட்டு ‘அரசியலா’னு கேட்டாங்க… ஆனா…”: லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ அதிரடி!

தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த லெஜண்ட் சரவணன், இப்போது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான அவதாரத்தோடு களம் இறங்குகிறார்! லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மிகப்பாரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் புதிய படத்திற்கு ‘லீடர்’ என்று மிரட்டலாகப் பெயரிடப்பட்டுள்ளது. சும்மா சொல்லக்கூடாது, இந்தப் படத்தின் அறிவிப்பே தியேட்டர் அதிரப்போகும் ஆக்ஷன் ட்ரீட்டிற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

‘எதிர்நீச்சல்’ போட்டுத் தொடங்கி, ‘காக்கி சட்டை’ அணிந்து, ‘கொடி’ கட்டிப் பறந்த இயக்குநர் R.S. துரை செந்தில்குமார் தான் இந்தப் படத்தைச் செதுக்கியுள்ளார். ‘பட்டாஸ்’ போல சரவெடியாகவும், சமீபத்திய ஹிட் படமான ‘கருடன்’ போல ஆக்ரோஷமாகவும் இந்தப் படத்தை அவர் இயக்கியுள்ளார். ஒரு சாமானிய மனிதன், துரதிர்ஷ்டவசமாக நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் பயங்கரமான மோதலில் சிக்கிக்கொண்டால் என்னவாகும்? அந்தச் சுழலில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் அவன் எப்படி ஒரு ‘லீடராக’ நின்று காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான ஒன்லைன்.

படம் எடுக்கப்பட்ட இடங்களே ஒரு உலகச் சுற்றுப்பயணம் போனது போல இருக்கும்! தூத்துக்குடியின் தகிக்கும் வெயிலில் தொடங்கி, ஜெய்ப்பூரின் ராஜ கம்பீரம், ஊட்டியின் குளிர்ச்சி, அதுமட்டுமில்லாமல் ஜார்ஜியாவின் வெளிநாட்டு லொகேஷன் எனப் பறந்து பறந்து படமாக்கி, சென்னையில் இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் திரில் என அனைத்து மசாலாக்களையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இதைக் கொண்டு வருகிறார் துரை செந்தில்குமார்.நட்சத்திரப் பட்டாளமும் சும்மா ஒன்றும் சிறியதல்ல! பாலிவுட் அழகி பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா எனப் பெரிய பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், லால், ‘பாகுபலி’ பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா என ஒரு ஜம்போ டீமே படத்தில் இருக்கிறது. ஜிப்ரான் வைபோதாவின் இசை படத்தின் வேகத்திற்குப் பலம் சேர்க்க, S. வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய அப்படத்தை பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்து மாஸ் காட்டினார். முதல் படத்திற்கு பின் லெஜண்ட் சரவணன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த ஓராண்டு காலமாக ரகசியமாக தனது இரண்டாவது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வந்தார்.

கருடன் படத்தின் வெற்றிக்கு பின்னர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சைலண்டாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. லீடர் படத்தின் மோஷன் போஸ்டரில் லெஜண்ட் சரவணன் செம்ம மாஸாக கையில் துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அண்ணாச்சி மீண்டும் ஆக்‌ஷனில் மிரட்டப்போகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.லீடர் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை லெஜண்ட் சரவணனே தனது லெஜண்ட் நியூ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விரைவில் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. லெஜண்ட் சரவணனின் இந்த அதிரடி ஆக்ஷன் வேட்டைக்காக ரசிகர்கள் இப்போதே ஆவலாகக் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்!

Related Posts