லாஜிக் இல்லாத அண்ணாத்தே ‘கதை’!
சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘அண்ணாத்தே’.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அண்ணாத்தே’ கதை இதுதான் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் உலவுகிறது.
அந்தக் கதை:
ரஜினிக்கு குஷ்பு, மீனா இருவரும் அத்தை மகள்கள். ரஜினியை திருமணம் செய்து கொள்ள இருவரும் போட்டி போடுகிறார்கள். ஒருவரை மணந்தால் மற்றவர் வருந்துவார் என்று நினைத்து, வேறு பெண்ணை ரஜினி திருமணம் செய்கிறார்.
அந்த பெண் மூலம் பிறக்கும் மகள்தான் கீர்த்தி சுரேஷ்.
மீனா, குஷ்பு ஆகியோருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் நடந்து, தலா ஒரு மகன். .
இவர்கள் இருவரும், தங்கள் மகனைத்தான், ரஜினியின் மகள் கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என மீண்டும் போட்டி போடுகிறார்கள்.
கீர்த்தி சுரேஷை மணப்பவர் யார் என்பது கிளைமாக்ஸ்!”
– இப்படி போகிறது சமூகவலைதளங்களில் உலவும் அந்த ‘கதை’
ஆனால் இது உண்மையல்ல என்கிறார்கள் படக்குழுவினர். மேலும், “கீர்த்தி சுரேஷூக்கு, குஷ்புவும் மீனாவும் சித்தி முறை. ஆகவே அவர்களது மகன்கள் கீர்த்திக்கு அண்ணன்கள். பிறகு எப்படி இவர்களுக்கிடையே திருமணம் செய்ய நினைப்பார்கள்?” என்கிறார்கள்.
சமூகதலவாசிகளே.. பொய்க்கதையாக இருந்தாலும் லாஜிக்கோட சொல்லுங்கப்பா!
– இனியன்