எல் 2 எம்புரான்: வில்லன் பெயர் மாற்றம்.. 17 காட்சிகளை நீக்கம்?
பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம், கடந்த 27ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் வசூலை குவித்தது. மறுநால் வசூல் அளவு நூறு கோடி ரூபாய் ஆனது.
படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாட… இன்னொரு பக்கம் பிரச்சினை வெடித்தது.
இப்படத்தில் 2002ல் நடந்த குஜராஜ் மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ ஆட்கள் நடத்திய கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கலவரத்தை தலைமை ஏற்று நடத்தும் கதாபாத்திரத்தின் பெயர் ‘பாபா பஜ்ரங்கி’ என உள்ளது. பஜ்ரங்தள் என்பது இந்துத்துவ அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியா முழுதும் பல்வேறு மொழிகளில் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில், ‘படத்தில் சில காட்சிகள் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன’ என இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து வில்லன் பெயரை மாற்றுவது, 17 காட்சிகளை நீக்க அல்லது வசனத்தை மியூட் செய்ய படக்குழு தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
