பிரபலங்கள் பாராட்டிய கொட்டாச்சியின் ’கழுமரம்’!

சென்னை; நடிகர் கொட்டாச்சி இயக்கி நடித்திருக்கும் படம் ’கழுமரம்’  நேற்று 20-ஆம் தேதி வெளியானது. மான்வலை அஞ்சலி வழங்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பாஸகர் வசனம் எழுந்தியிருக்கிறார். கேதர் இசை அமைத்திருக்கிறார். கிரிதரனின் அருமையான ஒளிப்பதிவு.  தரணிதரன் எடிட்டிங் செய்திருக்கிறார்.

இதில் தமிழ்பாரதி, பாண்டி செல்வன், சொற்கோ கருணாநிதி, கரண்ராஜ் நடித்திருக்கிறாரகள்.

இயக்குநர் ஆகும் ஆசையில் சென்னைக்கு வரும் இளைஞன் அவன் எதிர் கொள்ளும் பிரச்சனையை கூறும் படம் கழுமரம். நாயகனாக வரும் கொட்டாச்சியின் உணர்வுப்பூர்வமான நடிப்பு அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. தழுதழுப்பான குரலில் அவரது வலி,வறுமையை வெளிப்படுத்திய விதம் அருமை. முதல் முறையாக வாங்கும் ஏசி காற்றை ரசிக்கும் போது அருமை.  கொடுத்த வேலைகளை எல்லாம் செய்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சகித்துக் கொண்டு இருக்கும் புதிய இயக்குநர்களின் வலியை கண்முன் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அனைவரின் பாராட்டைப் பெற்ற இந்த குறும்படம் வலியும் வழியும் குழுவின் அடுத்த படைப்பாகும். குறும்படத்தை பார்த்த பல இயக்குநர்கள், பிரபலங்கள் தங்களது பாரட்டை  வெளிப்படுத்திவருகின்றனர்  என்பது குறிப்பிடதக்கது.

Related Posts