கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்கு பாராட்டு விழா!

சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள, கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மனித மனங்களில் அன்பையும், நம்பிக்கையும் விதைக்கும் படம் என அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில், கோபசெ படத்தில் பங்குபெற்ற கலைஞர்களை பாராட்டும் விழாவை, உலக சினிமா பாஸ்கரன் ஒருங்கிணைத்து இருந்தார்.உலக சினிமாவுக்கு இணையான வணிக சினிமா என்கிற தலைப்பில் கோழிப்பண்ணை செல்லதுரை ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், பல்வேறு துறை ஆளுமைகள் கலந்துகொண்டு கோபசெ படத்தை தங்களது பார்வையில் வெளிப்படுத்தினர்.
இ ஆர்ட்ஸ் நடிப்பு பயிற்சி மாணவர்கள் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் முக்கிய அம்சங்களை மைம் கலை மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தினார்கள். இக்குழுவின் தலைவர் மோக்லி கே மோகன் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பயனாடை அணிவித்து பாராட்டினார்.