சிங்கப்பூரில் கட்டில் திரைப்பட பாடல் அறிமுக விழா!

சிங்கப்பூரில் கட்டில் திரைப்பட பாடல் அறிமுக விழா!

சிங்கப்பூர் அரசின் பல்வேறு நாடுகளுக்கான முன்னாள் தூதர் கேசவபாணி அவர்கள் தலைமையில் கட்டில் திரைப்படப்பாடல் அறிமுக விழா சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.சமூக ஆர்வலர் ரமாசங்கரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, சிங்கப்பூர் தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான
அருமைச்சந்திரன் சிறப்புரை வழங்க, GT மணி அவர்களின் தொகுப்புரையில் விழா சிறப்பாக நடைபெற்றது.

திரைப்பட வினியோஸ்தர்கள்,  இலக்கியவாதிகள், ஊடகத்தினர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்றார்கள்.
விரைவில் உலகம் எங்கும் கட்டில் திரைப்படம் வெளியாகும் என இயக்குனர் இவி.கணேஷ்பாபு கூறினார்