“குடிக்கமாட்டேன்.. புகைக்கமாட்டேன்!”: விக்னேஷ்சிவன்

புகை, குடி பழக்கம் தனக்குக் கிடையாது என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார்.
போதை பழக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தும்விதமாக, குறும்பட போட்டியை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்தது. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள், முன்னூறு குறும்படங்களை அனுப்பினர். இதில் பரிசுக்கு தேர்வான மூன்று குறும்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தேர்ந்தெடுத்தார்.
பரிசளிப்பு விழா இன்று காலை, சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த்து. இதில் இளைஞர் நலன் – விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் அவர் பேசுகையில், “இன்று போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே சிறப்பாக குறும்படங்களை உருவாக்கி இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்தார்.