‘கற்பு பூமி’ படத்துக்குத் தடை!  பாடல் வெளியீடு!

‘கற்பு பூமி’ படத்துக்குத் தடை!  பாடல் வெளியீடு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கற்பு பூமி’ என்ற படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்றது. நேசம் முரளி எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், படத்தின் இயக்குநர் நேசம் முரளி இயக்கிய இந்தப் படத்தில் ‘கண்ணகி சிலை’ உள்ளது என்பதாலும் படத்தின் தலைப்பு ‘கற்பு பூமி’ என்று உள்ளது என்பதாலும் படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “படத்தைத் தானே சென்சார் போர்டு வெளியிடக் கூடாது என்றனர் படத்தின் பாடலை வெளியிடுவதற்கு சென்சார் போர்டு என்ன சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழா தானே பாடலை வெளியிடுவோம். காட்சிகளைத் தானே வெளியிடக் கூடாது கேசட்டுகளை வெளியிடலாமே” என கூறி படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து திரைப்பட மற்றும் அரசியல் ஆளுமைகள் நிகழ்வில் பேசினர்.

அவை தனிச் செய்திகளாக..

https://tamilankural.com/https-tamilankural-com-karpu-bhoomi-audio-launch/

https://tamilankural.com/artists-should-follow-dravidian-kazhagam-only-rk-selvamani/

https://tamilankural.com/karpu-boomi-thol-thiruma-vck/

https://tamilankural.com/today-theaters-are-in-the-hands-of-a-select-few-c-b-m-state-secretary-kp-action-speech/

 

 

Related Posts