‘Thug Life’ செய்தியாளர் சந்திப்பு: “இது எங்களுடைய மும்மொழி திட்டம்!”: கமல்

‘Thug Life’ செய்தியாளர் சந்திப்பு: “இது எங்களுடைய மும்மொழி திட்டம்!”:  கமல்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நாயகனாக நடிக்கும் படம்,’தக் லைஃப்’. இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் சிம்பு, த்ரிசா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்  நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு + செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கலைவாணர் அரங்கத்தில்பிரம்மாண்டமாக நடந்தது.  ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில்  கமல், “இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது நான் பேசுகிறேன். இது அரசியல் கிடையாது;  தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு பாரம்பரிய பழக்கம். இதை 2  000 வருடங்களாக கடைப்பிடிக்கிறோம்.  இன்றைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள்.  அபிராமி, தனது பதினோரு வயதில் நடிக்க வந்ததாக சொன்னார்.  அருகில் த்ரிஷா இருப்பதைப் பார்த்து  சொல்லியிருக்கலாம்.

இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவே இல்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள். வியாபாரக் கணக்கில்  சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவார்கள்.  மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கும் விநியோகஸ்தர்கள் தலை வணங்குவார்கள். அப்படிதான் புதிய திறமைகள் வருகிறார்கள். சிம்பு வந்ததும்அவர் அப்பா வந்ததும் அப்படித்தான்.

இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் இல்லை. 5.30 மணி ரத்னம். சரியாக 5 முப்பது மணிக்கு வந்துவிடுவார்.

இரவு முழுதும் அதே நினைவுடன் இருந்தால்தான் அலாரம் இல்லாமல் அப்படி வரமுடியும். ‘நாயகன்’ படத்தில்  இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் உண்டு.  இந்த விஷயத்தில் அவரிடம் நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன்.

டி.ஆருக்கு என் மீது மிகப்பெரிய அளவில் பாசம் உண்டு.  எனக்கு பிரச்சினை என்றால் ஓடி வருவார்.  தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப் போல,  சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்தப் படத்தில்  எனக்கு இரண்டு கதாநாயகிகள். ஆனால் அவர்கள் இருவருமே எனக்கு  ஐ லவ் யூ சொல்லவே இல்ல. இந்தப் படத்தில் எனக்கு ஐ லவ் யூ சொன்னவர், ஜோஜு ஜார்ஜ்தான்.

இன்றைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு இல்லை.  ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே அவசியம்.  நான் முன்பு சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னார். அந்த கதையில் இன்ஸ்பயர் ஆகி, அவர் களத்துல பயணித்து இருக்கிறார்.  பெண்ணை கொடுத்தாகிவிட்டது..  மாப்பிளை அவர். குழந்தை எப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும்.

மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல் படம்  இயக்கி இருக்கிறார்.  இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.  நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள். அதனால்தான் இந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நீங்ள்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனால், வேறு மாதிரி இருக்கும்.

மொழி போர் நடந்துகொண்டு இருக்கும் நேரம் இது. எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை –  ஜிங்குச்சானு வார்த்தையை – பயன்படுத்தி இருக்கிறோம். அது சீனமொழியாகக்கூட  இருக்கலாம்” என்று பேசினார் கமல்.

Related Posts