வெளியானது ‘ThugLife’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல்! வெளியான ஒரு மணி நேரத்தில் சாதனை!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நாயகனாக நடிக்கும் படம்,’தக் லைஃப்’. இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் சிம்பு, த்ரிசா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ”Thug Life படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகும்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது
இன்று காலை ‘ஜிங்குச்சா’ பாடலின் வீடியோவுக்கான புரோமோவை வெளியிட்டு இப்பாடல் பகல் 12:34க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் ஜிங்குச்சா பாடல் வெளியானது. இப்பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் & ஆதித்யா ஆர்.கே ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
பாடல்:
https://www.youtube.com/watch?v=o9mivPpQlSA