“இளையராஜ, ஏஆர் ரகுமானுக்கு பிறகு ஜீவி பிரகாஷ் குமார்தான்!”: ‘கிங்ஸ்டன்’ விழாவில் கலைப்புலி தாணு!

“இளையராஜ, ஏஆர் ரகுமானுக்கு பிறகு  ஜீவி பிரகாஷ் குமார்தான்!”: ‘கிங்ஸ்டன்’ விழாவில் கலைப்புலி தாணு!

இசையமைப்பாளர், நடிகர் என முத்திரை பதித்த ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் தனது  ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ சார்பாக, தயாரித்து நடிக்கும், கிங்ஸ்டன் மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.

கடல் அட்வென்ச்சர் குறித்து இதுவரை தமிழில் வெளியாகாத அளவுக்கு அதிரடி காட்சிகள் நிறைந்த படம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றதது

இதில் பேசிய,  பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ”’கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. ‘அசுரன்’ படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் ‘அசுரன்’ திரைப்படத்தின் பின்னணி இசையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார்கள்.

அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராசா’ பாடல் ஹிட் ஆகும்.

வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றார்.

Related Posts