‘கலைஞர் 100 கவிஞர்கள் 100’ நூலில் கவிஞர் கல்லாறு சதீஷ் கவிதை!
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தொகுத்த ‘கலைஞர் 100 கவிதைகள் 100’ என்ற நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல் நூல் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து, “கல்லாலும் சொல்லாலும் எழுப்பப்படுவன மட்டுமே நினைவுச் சின்னங்களாய் நிலைபெறுகின்றன இந்த 100 கவிதைகளும் கலைஞருக்குக் கவிஞர்கள் சொல்லால் எழுப்பிய நினைவுச் சின்னம் இந்திய அரசியல் பெருவெளியில்
ஓர் இனக்குழுத் தலைவனுக்கோ இந்திய தேசியத் தலைவனுக்கோ தான் வாழ்ந்த காலத்தின் 100 கவிஞர்களால் பாடப்பட்ட பெருமை கலைஞருக்கன்றி வேறெவருக்குமில்லை . அப்படி வகுத்த பெருமை கலைஞருக்கு; தொகுத்த பெருமை எமக்கு” என்று நெகிழ்ச்சியுடன் தனது முகநூல் பக்கத்தில் தெரிித்து உள்ளார்.

இந்நூலில், பாரதிதாசன்,மு.வரதராசன், முன்னாள் நீதிபதி ச.மோகன்,அவ்வை நடராசன், சுரதா,அ.மருதகாசி, அப்துல் ரகுமான், வாலி, ஈரோடு தமிழன்பன், முத்துலிங்கம், மு.மேத்தா, நா.காமராசன்,கனிமொழி கருணாநிதி,காசி ஆனந்தன், தமிழச்சி தங்கபாண்டியன், பிறைசூடன்,பழனி பாரதி, நா.முத்துக்குமார், கபிலன், பா.விஜய், விவேகா, கபிலன் வைரமுத்து, மனுஷ்ய புத்திரன்,சல்மா, ஆண்டாள் பிரியதர்சினி, சீனுராமசாமி உள்ளிட்டோர் கவிதைகளை தொகுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இந்த நூறு கவிஞர்கலில், கவிஞர் கல்லாறு சதீஷூம் இடம் பெற்றுள்ளார். அவரது, ‘தமிழ் நாட்டின் கல்விப் பிதா’ என்ற கவிதையும் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் கல்லாறு சதீஷ், “கவிப்பேரரசு வைரமுத்து அவர்கல் தொகுத்த ‘கலைஞர் 100 கவிஞர்கள் 100’ நூலில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது மகிழ்வை அளிக்கிறது. இன்று நடைபெற்ற நூல் நிகழ்வில் நான் சிறப்புக் கவிஞராக அழைக்கப்பட்டேன். நிகழ்வில் தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு ஏ.வா.வேலு அவர்கள் நூலை அறிமுகம் செய்து பிரதி வழங்கி பொன்னாடை போற்றிக் கெளரவித்தார். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உட்பட பல ஆளுமைகள் கலந்து கொண்டார்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.
