ஜியோவில் ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’: ஏடிஎம்-ல காசு இருக்கோ இல்லையோ… அதிரடி என்டர்டெய்ன்மென்ட் கேரண்டி!

ஜியோவில் ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’: ஏடிஎம்-ல காசு இருக்கோ இல்லையோ… அதிரடி என்டர்டெய்ன்மென்ட் கேரண்டி!

பாலிவுட்டின் ‘ஹிட் மெஷின்’ இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் தயாரிப்பில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை முதல் அதிரடியான ஒரு காமெடி த்ரில்லர் வெப் சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆக ரெடியாகிவிட்டது. அதுதான் ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’!

அவினாஷ் அருண் மற்றும் அமித் சத்யவீர் சிங் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடரில், அர்ஷத் வார்சி மற்றும் வீர் ஹிரானி ஆகியோர் லீட் ரோலில் கலக்கியிருக்கிறார்கள்.

கடற்கரையில் அநாதையாகக் கிடக்கும் ஒரு ஏடிஎம் மெஷின், அதன் பக்கத்தில் விநோதமாக நிற்கும் இரண்டு மனிதர்கள்… பார்த்தவுடனேயே நமக்கு ஏகப்பட்ட சுவாரசியத்தைத் தொற்றிக்கொள்ள வைக்கும் இந்த மர்மத்துக்குப் பிறகு நடப்பதெல்லாம் திக் திக் ரகள தான்!

ஜியோஸ்டார் நிறுவனத்தின் ஹிந்தி மற்றும் ஆங்கில என்டர்டெய்ன்மென்ட் பிசினஸ் ஹெட் அலோக் ஜெயின் பேசும்போது:

“நம்ம மண்ணோடு கலந்த, அதே சமயம் உலகெங்கும் உள்ள எல்லோரையும் கவரும் கதைகள்தான் எப்போதும் ஸ்பெஷல். பாசம், காமெடி, எமோஷன் நிறைந்த கதைகளுக்கு ரசிகர்களின் இதயத்தில் எப்போதும் தனி இடம் உண்டு. அந்த இடத்தை தன் முத்திரையால் பல வருடங்களாக அலங்கரித்து வருபவர் ராஜ்குமார் ஹிரானி. அவர் டிஜிட்டல் உலகிற்குள் கால்பதிக்கும் இந்த வேளையில், அவரோடு ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’ சீரிஸுக்காகக் கைகோர்ப்பதில் ஜியோஹாட்ஸ்டார் பெருமகிழ்ச்சி அடைகிறது. அவருடைய பாணியிலான இந்த நெகிழ்ச்சியான கதை, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

இந்த ப்ராஜெக்ட் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானி:

“முற்றிலும் மாறுபட்ட குணங்கள் கொண்ட இருவர், எதிர்பாராத சூழ்நிலையால் ஒன்றுசேர்ந்து, வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதைகள் எனக்கு எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். அந்த வகையில் ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’ சீரிஸில் ஏகப்பட்ட காமெடி, எமோஷன் மற்றும் கலாட்டாக்கள் கலந்திருக்கிறது. வெப் சீரிஸ் வடிவம் என்பதால், கதாபாத்திரங்களோடு அதிக நேரம் பயணித்து, அவர்களின் கதையை இன்னும் ஆழமாகச் சொல்ல நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இது ஒரு அருமையான அனுபவம். இதற்காக ஜியோஹாட்ஸ்டார் உடன் இணைவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று பகிர்ந்து கொண்டார்.

Related Posts