மிரட்டும் ஜெயம் ரவி!  வைரலாகும் ‘சைரன்’ பட ட்ரெய்லர்!

மிரட்டும் ஜெயம் ரவி!  வைரலாகும் ‘சைரன்’ பட ட்ரெய்லர்!

ஜெயம் ரவி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ள சைரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவி கொலைக்கு தண்டனை அனுபவிக்கும் நிலையில்… உண்மை கொலையாளியை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ஒரு குழந்தைக்கு அப்பாவாக ஜெயம் ரவி இந்த படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள”சைரன்” படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரித்து உள்ளது.

 

Related Posts