‘PHILANTHROPIST’ நடிகர் ஜெய்வந்த் பிறந்தநாள் விழா!

‘PHILANTHROPIST’ நடிகர் ஜெய்வந்த் பிறந்தநாள் விழா!

பிரபல நடிகர் ஜெய்வந்த்தின் பிறந்தநாள் விழா, இன்று தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ உள்ளிட்ட திரைப் படங்களில் நாயகனாக நடித்த இவர், சமீபத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என்று பன்முகம் கொண்டவர் ஜெய்வந்த் என்றாலும் அவரது முக்கிய முகம், கொடையாளர் என்பதே! தனது விசிட்டிங் கார்டிலேயே, PHILANTHROPIST என்பதை பதிவு செய்துள்ளார்!

தொடர்நது மனித நேய செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவற்றை முறைப்படுத்தவே, 2019ம் ஆண்டு, ‘அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கம்’ உருவானது.

இதன் நோக்கம் அற்புதமானது என்பதை முதல் விசயத்திலேயே நிரூபித்தார் ஜெய்வந்த்.

ஆம்.. தனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பெற்றோரை வைத்தே மன்றத்தைத் துவக்கினார்.

சென்னை வளசரவாக்கம் ஈஸ்வரி மஹாலில் நடைபெற்ற துவக்க விழாவில் அவர் பேசியதை மறக்கவே முடியாது.

ஜெய்வந்த் நற்பணி மன்ற துவக்க விழா

“இந்த இயக்கத்தின் நோக்கம் என்னுடைய பல்வேறு மனிதநேய நடவடிக்கைகள், ஒத்த கருத்துடைய நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதே. இது ஒரு நெடுந்தூர பயணம்.தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்” என்றார் ஜெய்வந்த்.

அந்த வழியில் மன்றத்தின் நற்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இயலாதோருக்கு தேடிச்சென்று உதவும் பணியை கடமை தவறாது செய்து வருகிறார் ஜெய்வந்தும் அவரது மன்றத்தினரும்!

எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

பெற்றோருடன் ஜெய்வந்த்

உலகத்தையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று கொடூரத்தை மறக்கவே முடியாது. அந்த காலகட்டத்தில், ஜெய்வந்த் தனது மன்றத்தின் மூலம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

குறிப்பாக, அந்த காலகட்டத்தில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பூர்,நாமக்கல், திண்டுக்கல், ஹோசூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்த மக்களை மக்களை அடையாளங்கண்டு தேவையான உதவிகளை – உணவு பொருட்தொகுப்புகளாக – அளித்தார்.

உதவிகள்

மேலும், அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், பல்வேறு முன்னணி நடிக-நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொள்வதாக அறிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். அதே நேரம், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் எதுவுமே இல்லாமல் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், படத்தின் வெற்றியில் ஒரு குறிப்பட்ட சதவீதத்தை சம்பளமாக தந்தால் போதுமானது என்றும் துணிச்சலாக கூறியிருக்கிறார்.

‘விடுதலை 2’ படத்தில் ஜெய்வந்த்..

இந்த நிலையில் இன்று ( 10.03.2025), சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஜெய்வந்த் அலுவலத்தில் அவரது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அவரது நற்பணி மன்றத்தினர் திரளாகக் கூடி வாழ்த்தினர். அதோடு, திரை மற்றும் பல்வேறு துறை பிரபலங்களும் ஜெய்வந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Posts