‘கடைசி விவசாயி’ – தேசீய விருது – சரிதானா? 

‘கடைசி விவசாயி’ – தேசீய விருது – சரிதானா? 

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மறைந்த நடிகர் நல்லாண்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்த படம்  கடைசி விவசாயி. இது 2022 பிப்ரவரி 11 அன்று வெளியானது.

இத்திரைப்படத்துக்கு  2021ம் ஆண்டுக்கான சிறந்த படம், மற்றும் சிறந்த நடிகர் ( நல்லாண்டி) தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

நல்லாண்டிஇந்நிலையில்,  “சிறப்பாக – இயல்பாக நடித்த நல்லாண்டிக்கு விருது கிடைத்தது பொருத்தம்தான். ஆனால் இப்படத்துக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது சரிதானா?” என்ற கருத்து  எழுந்துள்ளது.

பட போஸ்டர் – இயக்குநர் மணிகண்டன்படம் வெளியானபோதே, படத்தில் உள்ள அபத்தங்கள் குறித்து ( 12 மார்ச் 2022 அன்று), சமூக செயற்பாட்டாளர் – இயற்கை விவசாயி சித்தர் கா.திருத்தணிகாசலம் தனது முகநூல் பதிவில் எழுதினார்.

இயற்கை விவசாயி சித்தர் கா.திருத்தணிகாசலம்

அவரது பதிவு:

“கடைசி விவசாயி படம் இயல்பாக, சிறப்பாக இருக்கிறது.

ஆனால் விவசாயம் குறித்து எடுக்கப்பட்ட இப்படத்தில், விவசாயம் குறித்த புரிதல், இயக்குநருக்கு சுத்தமாக இல்லை. காட்சிகள் அபத்தமாக உள்ளன.

நிலவேம்பு ‘மரத்தை’ தேடி அலைவதாக ஒரு காட்சியும், ‘நிலவேம்பு ‘மரத்தை’  டெங்கு வந்தப்ப வெட்டிட்டாங்க’  என்கிற வசனம் வருகிறது.

நிலவேம்பு என்பது செடி என்பது கூட இயக்குநருக்குத் தெரியவில்லை.

தவிர, நிலவேம்பு மூலம் டெங்கு குணமாகும் என்பதும் தவறு.கடைசியில் வரும் நெல் அறுவடை காட்சியும் அபத்தம். .

நெல் அறுவடை எப்படி நடக்கும் என்பதை அறிந்து அந்த காட்சியை வைத்திருக்கலாம்.அதே போல,  மாட்டு மூத்திரம் பச்சிலை கொஞ்சம் பால்டாயில் கலந்தால் இயற்கை விவசாயம் என்பதும் அபத்தம்தான்” என்று சித்தர் கா. திருத்தணிகாசலம் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அந்த பதிவில், “சினிமா ஜாம்பவான்களே! விவசாயத்தை ஒழுங்காக புரிந்துகொண்டு படம் எடுங்கள்!

இல்லையென்றால் விவசாயம் சார்ந்து எடுக்கும் கடைசி படமாக, ‘கடைசிவிவசாயி’  இருக்கட்டும்!

சினிமாக்காரர்களே பாவம் விவசாயிகள் விட்டுவிடுங்கள் . விவசாயம் பிழைத்துக்கொள்ளட்டும்!” கா.திருத்தணிகாசலம் அன்றே பதிவிட்டார்.

இதற்கு இயக்குநர் மணிகண்டன் பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

Related Posts