விமர்சனம்: இந்த கிரைம் தப்பில்லை

விமர்சனம்: இந்த கிரைம் தப்பில்லை

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் கதை நாயகனாக நடித்து வெளிவந்துள்ள  திரைப்படம், ‘இந்த க்ரைம் தப்பில்லை’.

மேலும், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார் மேக்னா. அப்போது அங்கு வரும் 3 பேரை காதலிப்பது போல் நடித்து தன் பின்னால் அலைய வைக்கிறார்.

அதே சமயத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டமிடுகிறார்.
மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் அலையவைத்தார், ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்தார் என்பதுதான் கதை.

வழக்கம்போல ஆடுகளம் நரேன் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார். மேக்னாவின் நடிப்பு – குறிப்பாக சண்டைக் காட்சிகள் – செயற்கையாக உள்ளன.

ப்பட்டமான செயற்கைத் தனமாகவே உள்ளது. பாண்டி கமல், எப்போதும் வெறி பிடித்தவராகவே அலைகிறார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையிடம், பணம் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்க சொல்லும் காட்சி அதிர்ச்சி!

அதே நேரம், தொடர்பே இல்லாமல் பிரபாகரன், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் படங்கள் அவ்வபோது காட்டப்படுவது எதற்காக?

வில்லன் வீட்டில் தமிழ்நாடு  முதலமைச்சரின் படம் போட்ட காலண்டர் ஏன்?தொடர்பே இல்லாமல் சாதிய பாடல் ஏன்?

ஒரு க்ரைம் படத்துக்கான தேவையை பின்னணி இசை தரவில்லை.

ஒளிப்பதிவு சிறப்பு.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதையை எடுத்திருப்பதால் இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

ஆனாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக வரும் இக்காலத்தில், அவசியம் கூற வேண்டிய கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

அதற்காக பாராட்டலாம்!

 

 

Related Posts