” ‘வடக்குப்பட்டி ராமசாமி’க்கு ஊடகத்துறை ஆதரவுக்கு நன்றி!”: நடிகர் சேஷூ
கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தின் வெற்றி விழாவில், நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தில் பூசாரியாக நடித்துள்ள நடிகர் சேஷூ பேசும்போது, “ வெற்றி பெற கடவுளை மனதார வேண்டினேன். அதே போல படம் வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணமான ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றி. இயக்குநர் கார்த்திக் யோகிக்கு நன்றி.
சந்தானம் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும்.. அந்த படங்களில் எல்லாம் நானும் இருக்க வேண்டும்” என்றார்.
