இன்ஃபினிட்டி விமர்சனம்

இன்ஃபினிட்டி விமர்சனம்

சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி, வித்யா பிரதீப், ஜீவா ரவி, முனீஸ்காந்த் நடிப்பில்  உருவாகியுள்ள இன்பினிட்டி திரைப்படம் ஜூலை 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு இளம் பெண், எழுத்தாளர் மற்றும் ஒரு போலீஸ்காரர் வரிசையாக கொல்லப்படுகிறார்கள்., ​​வழக்கை அவிழ்க்க ஒரு சிபிஐ அதிகாரி நட்டி  அழைக்கப்படுகிறார்.அவரது விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படுகின்றன. அவை என்ன.. கொலைக்கான காரணங்கள் என்ன.. குற்றவாளி யார் என்பதுதான் கதை.

நிஜயமான சிபிஐ அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் நட்டி. நிதானமாக ஆனால் உறுதியாக அவர் நடத்தும் விசாரணை, முகபாவம், உடல் மொழி அனைத்தும் சிறப்பு.

போலீஸ்காரராக வரும் முனிஸ்காந்த், தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க.. ரசிக்க வைக்கிறார். சீரியஸாக செல்லும் க்ரைம் படத்தில் இப்படி ஒரு ரிலீப் தேவைதான்.

வித்யா பிரதீப் இயல்பாக நடித்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

மெதுாகச் செல்லும் திரைக்கதையை கொஞ்சம் வேகப்படுத்தி இருக்கலாம். அதே போல ரத்தம் தெரிக்கும் காட்சிகளை குறைத்து இருக்கலாம்.

ஆனாலும் இறுதிவரை சஸ்பென்ஸை அவிழ்க்காமல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர். மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து இருக்கிறார்.

 

Related Posts