தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர்கள் லடாக்கில் மாரத்தான் சாதனை!

லடாக், பிப்ரவரி 25, 2025
லடாக்கின் அழகிய, அதே நேரம் அசாதாரண பின்னணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வயது நண்பர்களும் இந்திய ராணுவ அதிகாரிகளுமான மேஜர் அமிர்தராஜ் மற்றும் மேஜர் விவேக் ஆகியோர் வெற்றிகரமாக பாங்காங் த்சசோ என்ற ஏரியில் – உறைந்த நிலையில் உள்ள ஏரியில் – அரை மராத்தானை நிறைவு செய்து சாதனை படைத்தனர்.
14,019.03 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரியில்,22°Cக்குக் குறைவான கடும் குளிரில், 21.1 கிலலோ மீட்டர் தூரம் அவர்கள் கடந்தனர்.
‘நீரை சேமிக்கவும், ஹிமநதிகளை காப்பாற்றவும்’ என்ற தலைப்பிலான இந்த மாரத்தானை அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.