இந்தியாவின் கடைசி மன்னர் மறைவு!
மன்னர், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி, முதுமையால் ஏற்பட்ட உடல் நலிவால் இன்று மறைந்தார். அவருக்கு வயது 89.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கப்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கப்பட்டி ஜமீன் தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கப்பட்டியும் ஒன்றாக இருந்தது. அதாவது, காலம்காமலாக இருந்த அரசர் – ஜமீன் முறை, வெள்ளையர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. பெரும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருந்த வெள்ளைய ஆட்சியாளர்கள், மன்னர்களை தங்களுக்கு கப்பம் கட்டுபவர்களாக அடக்கி வைத்திருந்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950களில், மன்னாரட்சி, சட்டப்படி ஒழிக்கப்பட்டது. அதற்கு சில வருடங்கள் முன்பு, மிக சிறு வயதில், மன்னராக முடிசூட்டப்பட்டவர் முருகதாஸ் தீர்த்தபதி.
ஆகவே இவரே இந்தியாவில் முடிசூட்டப்பட்ட மன்னர்களில் கடைசி மன்னர் ஆவார்.
கடந்த சில வருடங்களாக, வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்றிருந்த இவர், இன்று மறைந்தார்.