‘சர்வாதிகாரத்தின் வேறு பரிமாணத்தை உரக்க பேசும்’ஹிட்லர்’

‘சர்வாதிகாரத்தின் வேறு பரிமாணத்தை உரக்க பேசும்’ஹிட்லர்’

தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவராக வலம் வரும் விஜய் அண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படம், ‘சர்வாதிகாரத்தின் வேறு பரிமாணத்தை உரக்க பேசுகிறது என்றும், சர்வாதிகாரத்தின் வீரியத்தை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறது’ என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.’படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஹிட்லர்’. இதில் விஜய் அண்டனி, ரியா சுமன், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தமிழ், சரண் ராஜ், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லீ  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள்.

உதயசங்கர் கலை இயக்க பொறுப்பை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சங்கத்தமிழன் மேற்கொண்டிருக்கிறார். எக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நெஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.டி. ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

டீசரில் ‘நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’ என்ற வாசகம் தொடக்கத்தில் இடம்பெற்று, பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியதால், குறுகிய கால அவகாசத்துக்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது படக்குழுவினர் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

”படத்தின் தலைப்பு கதாநாயகனை பற்றியதாக இல்லாமல், கதையின் மையக் கருவினை தழுவி சூட்டப்பட்டிருக்கிறது. பயணத்தின்போது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவானது.

மேலும், உண்மை சம்பவத்தை தழுவியே கதை எழுதப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரத்தால் மக்களுக்கு ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்தவும் அல்லது திசை திருப்பவும் முயன்றால்.. என்ன நடக்கும் என்பதை தான் இப்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

ஹிட்லர் என்பது சர்வாதிகாரம் என்பதன் படிமமாகவோ குறியீடாகவோ மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். சர்வாதிகாரத்தின் வேறு பரிமாணத்தை விவரித்திருக்கிறோம்.

கதையின் நாயகனான விஜய் அண்டனி உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதால் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவடைந்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விஜய் அண்டனியின் ‘ஹிட்லர்’ திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

 

Related Posts