குட் பேட் அக்லி: குட் or அக்லி?

குட் பேட் அக்லி: குட் or அக்லி?

பான் வேர்ல்ட் (!) டான் ஏ.கே.! அவரது கூட்டாளிகள், காமெடியன், வில்லன்கள் என அனைைவரும், “ஏ.கே. எப்படிப்பட்டவர் தெரியுமா… அவர் அப்படிப்பட்டவர் தெரியுமா” என சீனுக்கு சீன் வியந்து புகழ்கிறார்கள்!

இவரது டான் வேலை மனைவிக்குப் பிடிக்கவில்லை. பிறந்த குழந்தையை பார்க்கக்கூடாது என தடை போடுகிறார். இதனால், குற்றங்களை ஒப்புக்கொண்டு, சிறைக்குச் செல்கிறார் டான் ஏ.கே.

17 வருடம் கழித்து திரும்புகிறார்.. ஆனால் மகன் சிக்கலில் மாட்டி இருக்கிறார். அவரை எப்படி விடுவித்தார் ஏ.கே. என்பதுதான் கதை.

டான் ஏ.கே.வாக அஜீத். தான் நடித்த பெரும்பாலான படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் அவர். அதிலும் வரலாறு போன்ற படங்களில் நடிப்பிலும் ஈர்த்தவர்.அவர் மீதே வெறுப்பு வரும்படியாக திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆளாளுக்கு அவரைப் புகழ்வதும், சாதாரண டயலாக்கையே பஞ்ச் போல அஜீத் பேசுவதும் எரிச்சலூட்டுகிறது.

அவரைத்தான் அப்படி காண்பித்திருக்கிறார்கள் என்றால், அவரது மச்சானாக வரும் ப்ரசன்னாவுக்கு ஏதேதோ மேக் அப் போட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

அஜித் மனைவியாக த்ரிசா. நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. பிரபு வந்து போகிறார்.

வில்லனாக வரும் அர்ஜூன்தாஸ் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் இரட்டை வேடத்தில் கலக்குகிறார். க்கல், நையாண்டி உடல்மொழியிலும் ஈர்க்கிறார்.

ஆனால் அவரது கதாபாத்திரம் – பாத்திரங்கள் சரியாக பின்னப்படவில்லை என்பது சோகம்.

ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஷாயாஜி ஷின்டே, சிம்ரன், டார்க்கி நாகராஜா, ஷைன் டாம் சாக்கோ என எல்லோரையும் வீணடித்து இருக்கிறார்கள்.

சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் இதில் தகர டப்பாவை அடித்துக்கொண்டே இருக்கிறார். பழைய பாடல்கள் மூன்றை போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். அவர் என்ன செய்வார்… அவருக்கான களத்தை இயக்குநர்தானே அளித்திருக்க வேண்டும்?

அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர் அமிநந்தன் ராமானுஜம்.

வசனங்களால் நிறைந்திருக்கிறது படம். அதிலும் ஏ.கே. புகழ் பாடுவது ஓவர் டோஸ். தவிர, “வரலாற்றுக்கே வரலாறா”, “தல தெரியலயே”, “அமர்க்களம், அட்டகாசம்…” என வித்தியாசமாக (!) சிந்தித்து வசனங்களை கொட்டி இருக்கிறார்கள்.

அதே நேரம் இடைவேளை காட்சி, ஏகே – அர்ஜுன் தாஸ் உரையாடல், ரவுடிகளின் வாட்ஸ்அப் க்ரூப் காட்சி போன்ற சில மட்டும் ரசிக்க வைக்கின்றன.

வட இந்தியாவில் இருந்து பிளைட்டில் சென்னை வந்து செயின் பறித்துச் செல்வது நிஜத்தில் நடக்கிறது. இது குறித்து கொஞ்சம் விசாரித்து திரைக்கதை அமைத்தாலே மிரட்டலாம்.

உலக அளவு டான்கள் கதை என்று, படக்கதைகளைவிட சிறுபிள்ளைத்தனமாக எடுத்து வைத்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக்.

லாஜிக் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்கள். ஓகேதான். அதெற்கென்று ஒரு எல்லை வேண்டாமா..

சிறைக் கைதியான டான் ஏ.கே., இரவில் போலீஸ் டிரஸ் அணிந்து ஒரிஜினல் போலீசாகவே வேலை பார்க்கிறார்.

இது ஒரு குண்டு பதம்.

ஒவ்வொறு லாஜிக் மீறலையும் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு ஷாட்களையும் சொல்ல வேண்டும்.

ஒருவரை சுட்டுக்கொல்லும் முன், “காட் பிளஸ் யு” என்று ஸ்டைலாக சொல்கிறார் அஜித்.

படம் பார்க்கப் போகும் நமக்கும் பொருந்தும்.

– டி.வி.சோமு

படம் பார்க்கச் செல்பவர்களை கடவுள் கூட

Related Posts