ஜி.கே.எம். தமிழ்குமரனின் ‘நலன் காக்கும் அணி’ அபார வெற்றி: திரையுலக ஜாம்பவான்கள் வாழ்த்து மழை!
தமிழ் திரையுலகின் மையம் என்றால், தயாரிப்பாளர் சங்கம்தான். இந்த சங்கத்தின் தேர்தலில், ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையிலான ‘நலன் காக்கும் அணி’ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது! இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஒன்றிணைந்து வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறது.
பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய வேட்பாளர்களுக்கு, தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் யதார்த்த இயக்குநர் பாலா ஆகியோர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து முன்னணித் தயாரிப்பாளர்களான எல்.கே. சுதிஷ், சத்ய ஜோதி டி.ஜி. தியாகராஜன், ஏ.எம். ரத்னம் மற்றும் லிங்குசாமி ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சரண், டி. சிவா ஆகியோரும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை வழங்கினர். ஃபெப்சி (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி, பொதுச்செயலாளர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் பொருளாளர் பேரரசு உள்ளிட்ட திரைத்துறை ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்டு, ‘நலன் காக்கும் அணி’யின் வெற்றிக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துத் திரையுலகின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்த மெகா கூட்டணியின் வாழ்த்துக்களால் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் மிகுந்த உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது!
