அம்பேத்கர் சிலைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மரியாதை!
அம்பேத்கர் சிலைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மரியாதை செலுத்தினார். இது குறித்து தவெக சார்பில் வெளியான அறிக்கை:
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி …
இன்று (14.04.2024)
கழக பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள்…தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சட்டமாமேதை அண்ணல் BR.அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் S.சீனு, A.ராஜசேகர், B.ராஜ்குமார், அன்பு, S.விஜய், S.அருண்ராஜ், கண்ணதாசன், S.பாலு, C.பன்னீர், மதன், மாநகர நிர்வாகி S.சாரதி, ஒன்றிய நிர்வாகி J.சுபாஷ், மாநகர நிர்வாகிகள் பாலாஜி தேசிகன், உட்பட 1000-திற்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்” – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.