மனித நேய அகடமியில் படித்து, ஐ கோர்ட் நீதிபதிகளான நால்வர்! சைதை துரைசாமி வாழ்த்து!

மனித நேய அகடமியில் படித்து, ஐ கோர்ட் நீதிபதிகளான நால்வர்! சைதை துரைசாமி வாழ்த்து!

பார் கவுசில் மற்றும் மனித நேயம் அறக்கட்டளை இணைந்து நடத்திய பயிற்சியில் பயின்று, வெற்றி பெற்ற சிவில் நீதிபதிகள் நால்வர், சென்னை உயர்நீதிமன்றத்தில்  பதவி யேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு சென்னை பெருநகர முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளையின் தலைவரும்,மாணவர்களுக்கு கல்வித் தந்தையாய் விளங்கும் சைதை துரைசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் மனித நேய ஐ.ஏ.எஸ் கட்டனமில்லா கல்வியகமும் இணைந்து சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் பதவிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

இந்த பயிற்சியில் பங்கேற்ற 206 பேர் நீதிபதிகளாகவும், குற்றவியல் வழக்கறிஞர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கான பயிற்சி, நீதிபதிகள் முதுநிலை வழக்கறிஞர்கள்  எஸ். முகுந்த்,கே. சுகுமாரன், சங்கர முரளி, பி. தனசேகரன், இ.கஜேந்திரன்,ஆர். சுப்பிரமணியன்,ராதா, பாலமுருகன்,டி. பன்னீர் செல்வம்,விவேகானந்தன், சூரியநாராயணன், கார்திகேயன், சண்முகம், மகாசாமிநாதன், கருப்பசாமி பாண்டியன், மற்றும் உளவியல் பயிற்சியாளார்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த தேர்வு முடிவில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி. கார்ந்திகேயன், தர்மபுரியை சேர்ந்த எஸ்.இ. சத்தியன், கன்னியாகுமாரியை சேர்ந்த இ. செல்வ நாராயணப் பெருமாள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கே. விசு ஆகிய 4 பேரும் வெற்றி பெற்றனர். இவர்கள்,  சென்னை உயர்நீதி மன்றத்தில்  சிவீல் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டதாக மனித நேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வில் வெற்றி பெற்று பதவியேற்ற நால்வருக்கும்  மனித நேய அறக்கட்டளையின் தலைவர், கல்வித் தந்தை சைதை துரைசாமி மற்றும் தமிழ் நாடு புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் மற்றும்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Posts