“சிறு வேடம் என்றாலும் மன நிறைவு அளிக்கிறது!”: நடிகர் சுந்தர் பாலா
நடிகர் ராமராஜன், 12 வருட இடைவெளிக்குப் பிறகு, `சாமானியன்’ திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம், ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.
முதன்முறையாக கையில் துப்பாக்கி ஏந்தி நடித்திருக்கும் ராமராஜனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்து கவனம் ஈர்த்து இருக்கிறார் நடிகர் சுந்தர் பாலா.
இது குறித்து அவர் கூறும்போது, “சிறு வேடம் என்றாலும் நடிகர் ராமராஜனுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தற்போது சுந்தர் பலா பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

