அடக்கம் செய்ய மறுக்கும் இறக்காத பிணங்கள்..! இயக்குநர் பேரரசு மனக் குமுறல்..!
சமீபத்தில் மருத்துவரின் மரணம் மனசாட்சி உள்ள அத்துனை இதயங்களையும் அவரின் இறுதிச் சடங்கு பாதித்தது. பல பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இயக்குநர் பேரரசுவின் கவிதை வரிகள் சில…
மனித வைரஸ்
————-
இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!
மனசாட்சியை
புதைத்துவிட்டு
மருத்துவரை
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!
இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!
நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!
கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!
இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கொரோனா வந்து
சாவதுமேல்!
தனது கவிதை வரிகளால் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.